Thursday 29 August 2013

ஆரண்யகாண்டம் - தமிழ் திரையுலகை நிமிர்த்தியது

தமிழ் சினிமாவின் உண்மையான மைல்கல், ஆரண்யகண்டம் கதை சொன்ன விதத்திலும் மேக்கிங்கிலும் தேர்ந்து எடுத்த கதாப்பாத்திரத்துக்கு ஏற்ற நடிகர்களாகட்டும் அனைத்துவகைகளிலும் . இதற்குமுன்பும் பலதரப்பட்ட கதைகள் இறுதியில் ஒன்று சேரும் ஒரூ புள்ளியில் அந்த வகையான இப்படமே முழுமையடைந்து திருப்த்தி அடையவைத்தது. தமிழ் சினிமாவின் இலக்கணத்தை துணிந்து தகர்த்து எரிந்தது.

சிங்கபெருமாளிடம் முறைத்து கொண்டு பின்பு காரில் செல்லும் போது நண்பர்களுடன் நக்கல் பேசிக்கொண்டு போகும் காட்சியில் பசுபதியை போற்று என்று சொல்லும்போது, சுற்றி இருப்பவர்கள் கண்களும் நடிக்கும் மிக நேர்த்தியாக அந்த காட்சி படமாக்க பட்டு இருக்கும். அங்கே ஆரம்பிக்கும் ஆர்வம் தியேட்டரை விட்டு வெளியே வந்தும் ஆர்வம் குறையவில்லை. 

கொடுக்கபள்ளி சிறுவன் தான் அப்பாவை திட்டுவதாகட்டும் , அக்கறை கொள்வதாகட்டும் , தன்னுடைய சேவல் இறந்தவுடன் அவனும் அவன் அப்பா காளையா இருவரின் நடிப்பும் மிகச் சிறப்பாக இருக்கும், சேவலை கொள்ளும் போதும் தன் பங்கிற்கு சிக்ஸர் அடிச்சிருப்பார் சிங்கபெருமாள்.


இதே போல் ஒவ்வொரு காட்சியும் மிகவும் சிரத்தை எடுத்து கவனித்திருப்பார் இப்படத்தின் அறிமுக இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. 

மிக பெரிய பலம் யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசை, படம் ஆரம்பத்தில் சுப்புவை சிங்கபெருமாள் காணும் காட்சியில் பின்னணியில் ரேடியோவில் ஒலிக்ககும் பாடல்களை கையாண்டே இருக்கும் போது  அங்கயே முடிவு செய்து விட்டேன் யுவன் புகுந்து விளையாட போகிறார் என்று, காட்சிகள் மிக பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கும் இவரின் இசை மென்மையாக வருடி கொண்டு இருந்தது. சண்டை காட்சிகளில் கூட தமிழ் சினிமாவில் முதல் முறையாக யாரும் இப்படி ஒரு மென்மையான இசை தந்திருக்க முடியாது.யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய இசை முத்திரையை பதிக்க ஆரண்யகண்டம் உதவி செய்து இருக்கிறது.

ஒவ்வொரு வசனமும் நடைமுறை வாழ்கையை ஓட்டியே சரியாக இருக்கும் ஒரு இடத்தில் கூட யதார்த்தத்தை மீறவில்லை , அவரவர் கேரக்டர்களுக்கு ஏற்ற வசனம் அதில் என்னை மிகவும் கவர்ந்தது படத்தின் இறுதியில் வரும் சுப்பு கூறுவாள் ,

"சப்பையும் ஆம்பளை தான் , எனக்கு எல்லா ஆம்பளையும் சப்பை தான்"

முடிவை ஒருவரும் யூகித்து இருக்க வழி இல்லாமல் முடித்து இருந்தது இயக்குனரின் மிக பெரிய வெற்றி. 

2010 அக்டோபர் மாதம் வந்த இத்திரைப்படம் இன்றுவரை இதன் சாயலில் எடுக்க ஒருவரும் முயற்சி செய்யவில்லை. இதுதான் இயக்குனருக்கு கிடைத்த மிக பெரிய கிரெடிட். ஏன் இதை கூறுகிறேன் என்றால் நம் தமிழ் சினிமாவில் தானே ஒரு வித்தியாசமான படம் ஹிட் அடித்துவிட்டால் அந்த பார்முலாவை அப்படியே தொடர்வார்கள். இந்த திரைப்படத்தால் தியாகராஜன் குமாரராஜா மீது மிக பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அவரின் அடுத்த படம் 11நபர் கொண்ட இயக்குனர்களில் இவரும் ஒருவர். அதுவும் வெற்றி படமாக அமைய இவரை வாழ்த்துவோம். இதுபோன்ற புது முயற்சிகளை வரவேற்ப்போம்.

1 comment:

  1. வெகு சமீபத்தில் பார்த்து, இப்போதெல்லாம் வாரம் ஒரு முறையேனும் பார்த்துவிடும் ஒரு படம்

    ReplyDelete