Monday 2 September 2013

யதார்த்தம் மீறியவையா இவைகள் ???


இப்பொழுது சமீபமாக பலராலும் யதார்த்த சினிமாக்கள் கேலிக்கு உள்ளாக்கபடுகிறது சென்ற வாரம் வெளியான தங்க மீன்கள் மற்றும் அதற்க்கு முன் வெளியான ஆதலால் காதல் செய்வீர் , இந்த திரைப்படங்களை முன்னிலைப்படுத்தியே கூறப்படுகின்றன.

ஆதலால் காதல் செய்வீர் - இன்றைய இளையோரின் காதல் இறுதி வரை நீடிக்கின்றதா இல்லைஎன்றால் அதனால் ஏற்படும் விளைவுகள். இந்த கதை களத்தில் இயக்குனர் கூறிய உண்மையை ஏற்று கொள்ள முடியாமல் , அவரவர் கூறும் எதிர்  கருத்துக்கள் ,

"யாருப்பா இப்போலாம் இப்படி பண்றா அவனவன் காண்டம் போட்டுட்டு பக்காவா செய்யுரானுங்க"

"அட காண்டம் போட சொல்லுரார்பா "

"கருவ கலைக்குரதுலாம் ரொம்ப சுலபம் இதை போய் என்னமோ பெரிய விஷயமா சொல்லிருக்கார் "

இப்படி பலதரப்பட்ட எதிர் விமர்சனம் கூறுகிறார்கள் , உண்மையில் இன்று பயிலும் கல்லூரி மாணவர்களிடம் சென்று கேட்டு பாருங்கள் , உண்மை முகத்தில் அறைவது போல இருக்கும்.அசிங்கமான உண்மைகள் நிறைந்த சமூகத்தில் தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் , இதை நிச்சயம் ஒற்று கொண்டு தான் ஆக வேண்டும். கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் உடன் பயிலும் தோழியை காதல் கொண்டால் அது அடுத்த கட்ட உறவுக்கு செல்லும் போது காண்டம் எல்லாம் எவனும் போடுவது இல்லை,(காண்டம் உபயோகிப்பது எய்ட்ஸ் தவிர்க்க என்றே நினைத்துக்கொண்டு இருக்கின்றனர் , கரு உண்டாகாமல் தடுக்க என்பது தெரிந்தும் அதை எவனும் கண்டு கொள்ளவது இல்லை அவனுக்கு பார்ட்னர் மீது நம்பிக்கை இருக்கும் பட்ச்சத்தில் போடுவதில்லை , வேசிகளிடம் மட்டுமே உபயோகிப்பார்கள் ) அதை முடித்து விட்டு பெருமையாக கதியாடிப்பதே வாடிக்கை பின் கரு கலைப்பது வேடிக்கை  ,இன்னும் ஒரு சிலர் இதில் பெண் அடிக்ட் ஆனவர்கள் அவர்களின் பிரியட் டேட்ஸ் தெரிந்து இந்த நாட்களில் கொண்டால் கரு உண்டாகாது என்பது வரை யோசித்து அதற்கு தகுந்தது போல ஏற்பாடு செய்பவனும் உண்டு , இதை சொல்லுவதற்கு கூட எனக்கு அசிங்கமாக உள்ளது. ஆனால் இதை இப்படி எதிர்கருத்து கூறுவோரிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை, இத்தனைக்கும் இயக்குனர் சுசீந்தரன் கூட பல தரப்பட்ட மாணவர்கள் மாணவிகள் பெற்றோர்கள் என்று இந்த படத்திற்காக கலந்துரையடிவிட்டே எடுத்து இருக்கிறார்.
அவ்வாறு செய்பவர்கள் இந்த படத்தை பார்த்தாவது காண்டம் போட்டு துலைந்தால் அது கூட வெற்றி தான். கருவை கலைத்து படத்தை முடித்திருந்தால் அப்பொழுது அந்த கருத்து இன்னும் கேவலமாக பேச பட்டு இருக்கும். அந்த இவர்களையும் சேர்த்து வைத்து இருந்தால் இந்த திரைப்படத்தை பற்றி இங்கு நாம் பேசவே வேண்டியது இல்லை அதுவும் ஒரு படம் என்று கடந்து போகிருக்கும், ஆக நடந்த நடக்கின்ற ஒன்றையே இயக்குனர் இதில் குறிப்பிட்டுள்ளார். அதை ஏற்று கொள்ளுவதும் அல்லாததும் அவரவர் விருப்பம்.ஆனால் இப்படி எல்லாம் நடப்பது இல்லை இது யதார்த்தம் மீறி வழி வகுப்பது என்று கூறுவோருக்கே இவை.



தங்கமீன்கள் -

கிராமத்தில் வாழும் தந்தை-மகள் அன்பு , மகளுக்கு இக்கால கல்வியால் ஏற்படும் சிரமங்கள் , மகளின் ஆசைகளை நிறைவேற்ற துடிக்கும் பண வசதியற்ற  தந்தை.இப்படி பின்னப்பட்டுள்ள கதையில் இதை எதிர்த்து கருத்து கூறுவோர்கள் ,அவரவர்க்கு இது நடைமுறைக்கு மீறியது , இப்பொழுது இப்படிலாம் பணம் பெறுவது பெரிய விஷயமில்லை , தவறு செய்யும் குழந்தையை கண்டித்தால் தவறா. என்று பலவாறு கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

6வயது மகளிடம் செல்லம் கொஞ்சும் தந்தை இயற்கையே , அவள் கேட்ப்பவைகளை வங்கி தர வேண்டும் என்று நினைப்பது இயற்கையே , எல்லோரையும் புறம் தள்ளி மகள் மீது மட்டும் பாசம் கொள்ளுவது இயற்கையே.மகளை விட்டு பிரியாமல் அவள் வளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும் என்று நினைப்பது இயற்கையே. கிராமத்தில் இருப்பவனுக்கு 6மாதம் சம்பளம் பாக்கி உள்ளவனுக்கு  2000 ஸ்கூல் கட்டணம் கட்டுவது கடினம், அவனுக்கு அந்த பணமும் பெரிது தான்.அதை அடைய அவன் வழி தெரியாமல்(+2 படிக்கையில் திருமணம்) தான் நண்பனின் உதவியை எதிர்பார்க்கிறான். அவனிடம் எப்படி நம் நகரத்தின் தொழில் யுக்திகளை எதிர்பார்க்க முடியும். அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணுனான் புள்ள பெத்துகிட்டான் அப்படின்னு எடக்கு மடக்கா கேட்காதீங்க , திரையில் காட்டியதை அதை இயல்பு வாழ்க்கையோடு சேர்த்தே கூறுகிறேன். இன்றைய கல்வி முறை மாணவர்களின் சிந்தனையை சிதைக்கின்றது என்பதை மிக அருமையாக காட்டியுள்ளார். எத்தனை குழந்தைகள் தமக்கு பிடித்தவைகளை செய்ய முடியாமல் , யோசிக்க முடியாமல் தவிக்கிறார்கள் கொஞ்சம் நினைத்து பாருங்கள். இந்த திரைப்படத்தில் இயல்பு மீறினது இறுதியில் அந்த இசை கருவியை தேடி மலைகள் தாண்டி காடு தாண்டி போகுவது மட்டுமே. அது தவிர அனைத்தும் அழகான கவிதைகள் போலவே இருக்கும்.

.இதுவும்  தங்கமீன்கள் கருத்து பிடிப்பதும் பிடிக்காததும் அவரவர் உரிமை ஆனால் இது யதார்த்தம் மீறியவை இயல்பியல் சுத்தமாக இல்லை அபத்தம் என்று கூறுவோருக்கு மட்டுமே.

யதார்த்தம் என்ற சினிமாவகைகள் ஒரு வட்டத்தினுள் சுருங்குவது இல்லை ஒரு வட்டத்தினுள்(உண்மைகளில்) இருப்பதை தான் காட்டுகிறது. நெஞ்சில் பெரும் தாக்கம் தரும் உண்மைகளை ஏற்று கொள்ள முடியவில்லை அதை விடுத்து யதார்த்த சினிமாக்கல் அனைத்தும்  அபத்தம் என்று கூற வேண்டாம் நண்பா , மீண்டும் நாம் பின்னோக்கியே சென்று விடுவோம்.


 இன்னும் நிறைய கூற வேண்டும் என்றே நினைக்கின்றேன் ஆனால் பதிவின் நீளம் கண்டும் இதை படிப்பவரின் நிலைக்கு வருந்தியும் முடித்துக் கொள்ளுகிறேன்.

பின் குறிப்பு :
1.உங்களுடைய கருத்துகளில் வேறுபட்டால் மன்னித்துவிடுங்கள் , உங்களின் மனம் வருத்தம் கொண்டதற்கு.

0 comments:

Post a Comment